என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ்"
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது, தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது. பேரணியில் திருநாவுக்கரசர் எம்பி, எச்.வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 தலைப்புகளின் கீழ் பா.ஜனதா, அ.தி.மு.க. அரசின் தவறுகள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக ரபேல் போர் விமான விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு, மோடியின் தேவையற்ற செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் மாநில அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கி உள்ளனர்.
இந்த பிரசார கையேட்டை நாளை (வெள்ளி) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுகிறார். காங்கிரஸ் விளம்பர குழு தலைவர் தங்கபாலு, சஞ்சய்தத், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் மத்திய - மாநில அரசுகளை தோலுரிக்க இந்த கையேடு உதவும் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா தெரிவித்தார். #LSPolls #Congress #BJP
தமிழ்நாட்டில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி தொண்டர்களிடம் நேரடியாக கருத்து கேட்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.
இதற்கு அவர் காங்கிரசின் சக்தி திட்டத்தின் மூலம் நவீன முறையில் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குரலில் உங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கேட்பது போன்ற குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குரல் பதிவு சக்தி திட்டத்தில் இணைந்துள்ள அனைவரது போன்களுக்கும் அனுப்பப்படுகிறது. அதைக் கேட்டு உங்கள் தொகுதியில் இவரை வேட்பாளராக போடுங்கள் என்று தொண்டர்கள் பதிவு செய்யும் வேட்பாளர் பெயர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக பதிவாகிறது.
தற்போது சக்தி திட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்துள்ள தொண்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-
திருவள்ளூர் பத்தாயிரத்து 64, கன்னியாகுமரி 38 ஆயிரத்து 298, ஆரணி 11 ஆயிரத்து 451, சிவகங்கை ஒன்பதாயிரத்து 979, கிருஷ்ணகிரி 5 ஆயிரத்து 564, தேனி 5 ஆயிரத்து 225, கரூர் நாலாயிரத்து 820, விருதுநகர் மூவாயிரத்து 603, திருச்சி 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 53.
இவர்கள் அனைவரிடமும் போன் மூலம் கருத்து கேட்கப்படுகிறது. முதல் முறையாக இந்த புதிய முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது. #LSPolls #Congress #RahulGandhi #ShaktiApp
பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நாளை தொடங்க உள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாதாரண தொண்டராக இருந்த என்னை பெரியார், காமராஜர், மூப்பனார் ஆகியோர் அமர்ந்து பெருமை சேர்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, சோனியா காந்தியின் வாழ்த்துகளை பெறுவதை பாக்கியமாக கருதுகிறேன்.
இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியை அமர்த்துகிற இமாலய பணியில் தமது பங்களிப்பை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் அல்லும், பகலும் அயராது உழைக்க வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
இந்த பணியை செய்து முடிப்பதற்காக நமக்கு 100 நாட்கள் கூட இல்லை. கண் துஞ்சாது, அயராது, கடமை உணர்வோடு உழைப்பதன் மூலமே நமது வெற்றிகளைப் பெற முடியும்.
எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8-ந் தேதி மாலை 3 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #KSAlagiri
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பணிக்குழு, பிரசார குழு, விளம்பர குழு, ஊடக தொடர்பு குழு மற்றும் நிர்வாக குழுக்களை அமைக்கும்படி ராகுல் காந்தி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்திலும் இந்தகுழுக்களை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சஞ்சய் தத் முன்னிலையில் கடந்த வாரம் நடந்தது.
ஆனால் ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படாததால் டெல்லியில் முகுல்வாஸ்னிக் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் குழுக்களுக்கான பட்டியல் தயாராகி இருக்கிறது.
ஒருங்கிணைப்பு குழு முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், மற்றும் ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாணிக் தாகூர் உள்பட 10 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் பணிக்குழுவில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 10 பேர் மற்றும் அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், சி.டி.மெய்யப்பன், நடிகை குஷ்பு, ஆரூண், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, கோபிநாத் உள்பட 20 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.
பிரசார குழு தலைவர் பதவிக்கு இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளம்பர குழுவுக்கு வசந்தகுமார், தங்கபாலு, ஆகியோரது பெயரும் தகவல் தொடர்பு குழுவுக்கு கோபண்ணா, அழகிரி, விஜய தரணி, ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 5 பேர் கொண்ட நிர்வாககுழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, விஜயதரணி, அமெரிக்க நாராயணன், எம்.ஜோதி, இதயதுல்லா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, உள்பட 10 பேர் கொண்ட பெயர் பட்டியலும் தயாராகி இருக்கிறது.
இந்த பெயர் பட்டியல்கள் அனைத்தும் ராகுல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி 22-ந்தேதி டெல்லி திரும்புகிறார். அவர் ஒப்புதல் அளித்ததும் அதிகாரப்பூர்வமாக பட்டியல் வெளியாகும். என்று கூறப்படுகிறது. #congress #parliamentelection #mukulwasnik
இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய நாளையொட்டி ராயபுரத்தில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இன்றைக்கு திருஷ்டி பரிகாரம் போல நான்கரை ஆண்டு காலம் இந்தியாவை மோடி ஆண்டு கொண்டிருக்கிறார். நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நான்கரை ஆண்டு காலங்களில் இதுவரை மோடி என்ன செய்துள்ளார். 91 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2012 கோடி ரூபாய் பணம் விரையம் ஆகியுள்ளது.
முத்தலாக் சட்டத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை. அதற்கு மாறாக விரிவான தெளிவான விவாதங்கள் வேண்டும் என்பதற்காகத் தான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்கள்.
ஆனால் எந்தவிதமான கோரிக்கையையும் ஏற்காமல் மசோதாவை அமல்படுத்தி உள்ளது ஏற்கத்தக்கதல்ல கண்டனத்துக்குரியது. மிகப்பெரிய விவாதத்திற்குப் பிறகு தான் மசோதாவை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
தை பிறந்தால் காங்கிரசுக்கு நல்ல காலம் பிறக்கும். குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.
அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
மத்திய-மாநில அரசுகளின் செயல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2-ந்தேதியில் இருந்து 12-ந் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்படுகிறது. தற்போது திருநாவுக்கரசர் அமெரிக்காவில் இருக்கிறார்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
பதில்:- இதை சொல்வதற்கு முன்பு அவரது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் உள்ள தலைவர்களிடையேயும் நிலவும் பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டும்.
எங்கள் கூட்டணி சுயநல கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்று மக்கள் சொல்வார்கள்.
5 மாநில தேர்தலில் அடி பலமாக விழுந்ததால் அவர்கள் இன்னும் அதில் இருந்து மீளவில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்பதை கேள்விப்பட்டேன். மாற்றம் வரும் பார்ப்போம்.
இவ்வாறு குஷ்பு கூறினார். #Congress #Kushboo
அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் தோறும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகிறோம்.
மத்திய அரசும், தமிழக அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #sanjayDutt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்